ரஞ்சி கோப்பை 2022: 23 வருடத்திற்கு முன் தவறவிட்ட கோப்பையை இப்போது தூக்கிய சந்திரகாந்த்!

Updated: Sun, Jun 26 2022 22:26 IST
'A Blessing That Was Left 23 Years Back Achieved In 2022', Says MP Coach Chandrakant Pandit (Image Source: Google)

கடந்த 1988-1989 ரஞ்சி கோப்பை போட்டியில் மத்திய பிரதேச அணி முதல் முறையாக இறுதிப்போட்டியில் விளையாடியது. அப்போட்டியின் கேப்டன் தற்போதைய மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் என்பது சுவாரசியமான தகவல். அப்போது இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணி கர்நாடக அணியிடம் தோல்வியுற்றது. 

இப்போது 2021-2022 ரஞ்சி கோப்பை போட்டியில் மத்திய பிரதேச அணி கோப்பையை முதன்முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது. இதில் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் என்பதால் சினிமா மாதிரி இருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த வெற்றிக் குறித்து பேசிய மத்திய பிரதேச அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறுகையில், “எல்லா கோப்பையும் மகிழ்ச்சி தரும் ஆனால் இது சற்று கூடுதலான மகிழ்ச்சி. கேப்டனாக என்னால் முடியவில்லை. ஆனால் தற்போது ஆதித்யாவை (ம.பி. கேப்டன்) நினைத்துப் பெருமையாக உள்ளது. எனக்கு எப்போதுமே ம.பி. அணிக்கு ஏதோ சிறிது திருப்பி செலுத்த வேண்டுமென்று நினைப்பு இருக்கும். அது இப்போது நிறைவடைந்தது. அதனால் இந்த வெற்றி மிகுந்த நெகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை