இலங்கை மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செம்ஸ்ஃபோர்ட்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேனியல் வையட் - மையா பௌச்சர் இணை களமிறங்கினர். 

Advertisement

இதில் டேனியல் வையட் ஒரு ரன்னிலும், மையா பௌச்சர் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி, கேப்டன் ஹீதர் நைட், எமி ஜோன்ஸ், ஃபெரெயா கம்ப், டேனியல் கிப்சன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய சார்லோட் டீன் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் கள்மிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து - அனுஷ்கா சஞ்சீவனி இணை களமிறங்கினர். இதில் அனுஷ்கா சஞ்சீவனி ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷித்தா சமரவிக்ரமா களமிறங்கினார். 

இதில் அதிரடியாக விளையாடிவந்த கேப்டன் சமாரி அத்தபத்து தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 55 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஹர்ஷித்தா சமரவிக்ரமா 30 ரன்களையும், விஷ்மி குனரத்னே 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. மேலும் இப்போட்டியில் அரைசதம் கடந்து வெற்றிக்கு காரணமாக இருந்த சமாரி அத்தபத்து ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News