வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல்கட்டமாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. 

Advertisement

அதிகபட்சமாக அறிமுக வீரர் ஆலிக் அதனெஸ் 47 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதனை எடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தது.

Advertisement

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு அறிமுகவீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த 13வது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் இதுவரை இரண்டு இந்திய துவக்க வீரர்கள் மட்டுமே சதம் விளாசியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஷிக்கர் தவான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் அடித்தார். 2018ஆம் ஆண்டு ப்ரிதிவி ஷா அடித்தார். ஒட்டுமொத்தமாக 16 இந்திய பேட்ஸ்மேன்கள் அறிமுக போட்டியில் சதமடித்தனர். இதில் , கடைசியாக ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ப்ரிதிவி ஷா ஆகியோர் தங்களது முதல் போட்டியில் சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News