தவானை புறக்கணிப்பது நியாமல்ல - ஷிகர் தவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மட்டுமே தற்போது அங்கு சென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களையும் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு சீனியர் வீரர் ஷிகர் தவானை சேர்க்க பிசிசிஐ முயன்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் ஹசாரேவில் தவானின் செயல்பாடுகள் மோசமாக இருந்தன. இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 56 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். மறுபுறம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி சதங்களை குவித்து வருவதால், இனி ஷிகர் தவனுக்கு இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ஷிகர் தவானை அணியில் சேர்த்தே ஆக வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விஜய் ஹசாரேவில் தவானின் செயல்பாடு சரியாக இல்லை தான். இதனால் தேர்வுக்குழு அவரை புறக்கணித்தால் அது நியாயமாக இருக்காது.
தவான் கண்டிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ப்ளேயிங் 11இல் இடம்பெற வேண்டும். எனென்றால் சர்வதேச களங்களில் தவான் ஏற்கனவே தன்னை நிரூபித்த ஒரு வீரர். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர். அப்படிபட்ட வீரரை புறக்கணிக்க கூடாது.
2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கே ஷிகர் தவானை வைத்து திட்டமிடலாம். இந்தாண்டு இந்திய அணி பெரிய அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. எனினும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடிய ஆட்டங்கள், நிச்சயம் உலகக்கோப்பைக்கு விளையாட தகுதியானவர் என்று கூறும்” என தெரிவித்துள்ளார்.