ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Sat, Mar 15 2025 13:15 IST
Image Source: Google

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மார்ச் 23அம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் யார் அதிக ரன்களை எடுப்பார்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார், மும்பை இந்தியன்ஸ் அணியில் கவனிக்கப்பட வேண்டிய வீரர் யார் என்பது உள்ளிட்டவற்றை கணித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் இரண்டு அணிகளை அரிவித்துள்ளார். அதன்படி தன்னுடைய முதல் அணியில் மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க கூடிய நான்கு வெளிநாட்டு வீரர்களாக ரியான் ரிக்கெல்ட், வில் ஜேக்ஸ், மிட்செல் சான்ட்னர் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். இதில் அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டை தேர்வுசெய்ள்ளார். அதேசமயம் மூன்றாம் வரிசையில் வில் ஜேக்ஸை தேர்வு செய்துள்ளார். 

அவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் நமன் தீர் ஆகியோரை பேட்டர்களாக தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு பந்துவீச்சை பொறுத்தவரையில் மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார், டிரண்ட் போல்ட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஆகாஷ் சோப்ரா ஜஸ்பிரித் பும்ரா முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்துள்ளார். 

அதேசமயம் அவர் தேர்வு செய்த இரண்டாவது ஆணியில் ரிக்கெல்டனுக்கு பதிலாக வில் ஜேக்ஸை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். இதனால் இளம் வீரர் ராபின் மின்ஸுக்கு விக்கெட் கீப்பர் பொறுப்பையும் வழங்கியுள்ளார். மேற்கொண்டு பும்ரா உடற்தகுதி இல்லாத பட்சத்தில் ரீஸ் டாப்லி அல்லது முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் லெவனில் சேர்க்கலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 1: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2:  ரோஹித் சர்மா, வில் ஜாக், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், ராபின் மின்ஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ரீஸ் டாப்லி/முஜீப் உர் ரஹ்மான்.

ஆகாஷ் சோப்ராவின் கணிப்பு

Also Read: Funding To Save Test Cricket

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவிக்கும் வீரர்களாக வில் ஜேக்ஸ் அல்லது திலக் வர்மா இருப்பார்கள் என்றும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரராக டிரென்ட் போல்ட் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக நமன் தீர் மற்றும் ராபின் மின்ஸ் ஆகியோர் இருப்பார்கள் என்றும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை