ஐபிஎல் 2025: எஸ்ஆர்எச்-ன் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Thu, Mar 13 2025 11:25 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது. 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரை தன்னுடைய நான்கு வெளிநாட்டு வீரராக தேர்வு செய்துள்ளார். இதில் பாட் கம்மின்ஸ் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து, மெகா ஏலத்தின் மூலன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இஷான் கிஷான், அபினவ் மனோகர், ஹர்ஷல் படேல், முகமது ஷமி மற்றும் ராகுல் சஹார் உள்ளிட்டோருக்கும் அவர் இந்த பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து அவர் அணியின் இம்பேக்ட் வீரராக சச்சின் பேபி, அன்கேத் வர்மா, ஜெய்தேவ் உனாத்கட் உள்ளிட்டோரை தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென் (வாரம்), நிதிஷ் குமார் ரெட்டி, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஆடம் ஸாம்பா, ராகுல் சாஹர்.

Also Read: Funding To Save Test Cricket

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை