பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமனம்!

Updated: Mon, Nov 18 2024 21:42 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய முடிவுகளில் விரும்பமின்பை காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தற்காலிக பயிற்சியாளராகவும் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டிருந்தர். அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்து நடந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி மீது மீண்டும் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தற்காலிக பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அவர் இந்த பதவில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி தொடர்வார் என்பதையும் உறுதிசெய்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் அணிக்காக 22 டெஸ்ட் மற்றும் 163 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஆகிப் ஜாவித், கடந்த 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற பாகிஸ்தான் அணியிலும் விளையாடியுள்ளர். மேற்கொண்டு பிஎஸ்எல் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காகவும், சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை