டி20 உலகக்கோப்பை: தோல்வி குறித்து மனம் திறந்த ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Sat, Oct 22 2022 22:11 IST
Aaron Finch reveals road ahead for Australia after huge loss vs New Zealand at the SCG (Image Source: Google)

டி20 உலகக்கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றில் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடியும் 86 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்களையும், டெவோன் கான்வே 58 பந்துகளில் 92 ரன்களையும் விளாசினர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை.

ஓப்பனிங் வீரர்கள் டேவிட் வார்னர் 5, ஆரோன் ஃபிஞ்ச் 13 என ஆட்டமிழந்தனர். இதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் 16, மேக்ஸ்வெல் 28, ஸ்டோய்னிஸ் 7 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 17.1 ஓவர்களில் 111 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி கண்டது.

ஆஸ்திரேலியாவின் இந்த மோசமான தோல்வி குறித்து கேப்டன் ஆரோன் ஃபின்ச் மனம் வருந்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நியூசிலாந்தின் ஓப்பனர்கள் நினைத்ததை முடித்துவிட்டனர். அவர்கள் முதல் 4 ஓவர்களில் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாங்கள் மீளவே இல்லை. இதே போல வெகுவிரைவாக விக்கெட்கள் எடுக்க வேண்டும் என நினைத்தோம், அதுவும் நடக்கவில்லை.

சேஸிங்கின் போதும் சிறந்த தொடக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. நெட் ரன்ரேட் தேவை என்ற நோக்கத்தில் ஆட நினைத்து முன்கூட்டியே நிறைய விக்கெட்களை இழந்துவிட்டோம். அடுத்ததாக இலங்கை அணியுடன் விளையாடவுள்ளோம். அதிலாவது எங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை