சதம் விளாசிய மிஸ்டர் 360; உச்சகட்ட ஃபார்மில் ஆர்சிபி!
14வது சீசன் ஐபிஎல் தொரரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்குத் தயாராகும் வகையில் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டு பயிற்சிகளைத் தொடங்கியுள்ளன.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பயிற்சியின் ஒரு பகுதியாக ஹர்ஷல் படேல் தலைமையிலும், தேவ்தத் படிக்கல் தலைமையிலும் இரண்டு அணிகளாகப் பிரித்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
டாஸ் வென்ற ஹர்ஷல் படேல் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணிக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய முகமது அசாருதீன் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் ஹர்ஷல் படேல் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. பின் கடின இலக்குடன் தேவ்தத் படிக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதிக் அதிகபட்சமாக ஸ்ரீகர் பாரத் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 95 ரன்கள் விளாசினார். பயிற்சி போட்டிகளிலேயே ஆர்சிபி அணி உச்சகட்ட ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளதால், நிச்சயம் இந்தாண்டு ஆர்சிபி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.