ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் சாதித்துள்ளார்.

Advertisement

ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய். 

Advertisement

அதேசமயம் 210 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனை ஹோ சி ஹூய் தங்கப்பதக்கம் வென்றார். பளுதூக்குதல் பிரிவில் இந்திய அணிக்கு கிடைக்கும் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கமும் இதுவாகும். இதற்கு முன்னதாக 2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார் கர்ணம் மல்லேஸ்வரி.

இதனிடையே வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்க்கு பிரதமர் மோடி,குடியரசு தலைவர், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீராபாய் சானு! பளுதூக்குதலின் முற்றிலும் அற்புதமான காட்சி. நீங்கள் காயத்திலிருந்து மீண்டு, தாற்போது இந்தியாவிற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க பதக்கத்தை பெற்று தந்துள்ளீர்கள். நீங்கள் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் ட்விட்டர் வாயிலாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News