ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பேருந்து மீது தாக்குதல்!

Updated: Wed, Mar 16 2022 18:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதனால் 10 அணி வீரர்களும் மும்பைக்கு படையெடுத்துள்ளனர். ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அதன்படி இத்தொடரில் விளையாடுவதற்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

வீரர்களை ஒட்டலில் இருந்து விளையாடும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு அணியின் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான பேருந்து மும்பையில் உள்ள ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அந்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ளனர். டெல்லி அணி கொலாபாவில் உள்ள தாஜ் மஹால் பேலஸில் தங்கும். மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அணியின் பயோ-பபுளில் வீரர்கள் இணைவார்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷேன் வாட்சனையும் உதவி பயிற்சியாளராக நியமித்துள்ளது. அவர் விரைவில் அணியுடன் இணைய இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை