ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவனை தேர்ந்தெடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்!

Updated: Sat, May 17 2025 13:37 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவன் அணியை இன்று தேர்ந்தெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இந்த அணியில் ஐபிஎல் பட்டங்களை வென்ற வீரர்களைக் கொண்டு மட்டுமே லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்திருக்கும் இந்திய அணியில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

அதன்படி அவர் மும்பை அணிக்காக ஐந்து முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா, மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி ஆல் ரவுண்டர் கீரோன் பொல்லார்ட், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் இலங்காஇ அணியின் முன்னால் ஜாம்பவான் லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளனர். 

மேற்கொண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வுசெய்துள்ள இந்த ஐபிஎல் ஆல் டைம் சாம்பியன்ஸ் லெவன் அணியின் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்துள்ளார். மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், 12 முறை ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், அவர் தனது அணியில் சிஎஸ்கேவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளாஅர். இது தவிர சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையடியா டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுனில் நரையன் உள்ளிட்டோருக்கும் தனது அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் சாம்பியன்ஸ் லெவன்: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, சூர்ய குமார் யாதவ், கீரன் பொல்லார்ட், மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, புவனேஷ்வர் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை