சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!

Updated: Wed, Jun 11 2025 13:12 IST
Image Source: Google

சௌதாம்படனில் நேற்று நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் ஆதில் ரஷீத் 4 ஓவர்களை வீசிய நிலையில் அதில் 30 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை முந்தியுள்ளார்.

முன்னதாக வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஷ்தஃபிசூர் ரஹ்மன் 107 போட்டிகளில் 106 இன்னிங்ஸ்களில் விளையாடி 134 விக்கெட்டுகளை வீழ்த்தி 5ஆம் இடத்தில் இருந்த் நிலையில், தற்சமயம் ஆதில் ரஷித் 127 டி20 போட்டிகளில் 122 இன்னிங்ஸ்களில் 135 விக்கெட்டுகளை வீழ்த்தி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சௌதீ 126 டி20 போட்டிகளில் 123 இன்னிங்ஸ்களில் 164 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • டிம் சௌதீ- 164
  • ரஷித் கான் - 161
  • ஷகிப் அல் ஹசன் - 149
  • இஷ் சோதி - 144
  • ஆதில் ரஷித் - 135
  • முஷ்தஃபிசூர் ரஹ்மான் - 134

இந்த போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 248 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 84 ரன்களையும், ஜேமி ஸ்மித் 60 ரன்களையும், ஜேக்கப் பெத்தல் 36 ரன்களையும், கேப்டன் ஹாரி புரூக் 35 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி மற்றும் ரூதர்ஃபோர்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முன்னாள் கேப்டன் ரோவ்மன் பாவெல் 79 ரன்களையும், கேப்டன் ஷாய் ஹோப் 45 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்ததுடன், 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை