AFG vs NED, 2nd ODI: குர்பாஸ், ரஹ்மான் அசத்தல்; தொடரை வென்றது ஆஃப்கான்!

Updated: Sun, Jan 23 2022 21:27 IST
AFG vs NED, 2nd ODI: Afghanistan grab 10 points and take a 2-0 lead (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக கேபட்ன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் அரைசதம் கடந்தார்.

இதமூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 103 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 54 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 86 ரன்களைச் சேர்த்தார்.

ஆனால் அவரைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறினர். இதனால் 47.4 ஓவர்களில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜிப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இப்போட்டியில் சதமடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை