டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மொதுவதாக இருந்தன.
மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட து. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விட்டு விட்டு மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 5 ஓவர்களாக நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மழை நிற்பதற்கான அறிகுறியே இல்லாததால் இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே ஒத்திவைக்கைப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
முன்னதாக நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாட இருந்த இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் குரூப் 1-இன் புள்ளிப்பட்டியளில் அயர்லாந்து அணி 3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.
இதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளும் இதே மைதானத்தில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.