எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றது. மேற்கொண்டு எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனானது எதிவரும் ஜனவரி 09ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால் நடப்பு எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரின் அணியான எம்ஐ கேப்டவுன் அணி இந்த தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக எஸ்ஏ20 வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது தங்கள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கீரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்தது. ஏனெனில் அவர் யுஏஇ-ல் நடைபெறும் ஐஎல் டி20 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் எமீரேட்ஸ் அணியிலும் கீரன் பொல்லார்ட் அங்கம் வகித்து வருகிறார். மேலும் இம்முறை இந்த இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.
இதனால் கீரன் பொல்லார்டை ஐஎல்டி20 தொடரில் விளையாடும் வகையில் எஸ்ஏ20 லீக் தொடரில் இருந்து அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர்த்தூ கீரன் பொல்லார்ட் தலைமையில் எஸ்ஏ20 லீக் தொடரில் இரண்டு சீசன்களை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது பெரிதளவில் சோபிக்க தவறியதுடன், இரண்டு சீசன்களில் தலா 3 வெற்றி மற்றும் 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்திருந்தது.
இதன் காரணமாக கூட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கருத்துகளும் வெளியாகின. இந்நிலையில் தான் தற்சமயம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் கேப்டனாக ஆஃப்கனிஸ்தான் டி20 கேப்டன் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்த தொடரின் முதல் சீசனின் போதே ரஷித் கான் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், காயம் கரணமாக அவர் அந்த ஆண்டு இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்: ரஷித் கான் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ககிசோ ரபாடா, டிரென்ட் போல்ட், அஸ்மத்துல்லா ஒமர்சாய், டெவால்ட் பிரீவிஸ், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, நுவான் துஷாரா, கானர் எஸ்டெர்ஹூய்சென், டெலானோ போட்ஜீட்டர், ராஸ்ஸி வான்டெர் டுசென், தாமஸ் கேபர், கிறிஸ் பெஞ்சமின், கார்பின் போஷ், காலின் இங்க்ராம், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேன் பீட், டிரிஸ்டன் லூஸ்