ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!

Updated: Wed, Oct 30 2024 12:09 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அனைத்து வடிவங்களிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை வீழ்த்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டத்தை வென்று அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து மூன்று வடிவங்களிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஸ்ஃப்கானிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அந்தவகையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சூப்பர் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ரஷீத் கான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாட இருந்த நிலையில் அப்போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் அவர் தற்போது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப உள்ளார். ரஷித் கடைசியாக மார்ச் 2021 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்நிலையில் தான் அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. 

மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஷித் கான் பங்கேற்பார் என்பதை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கானும் உறுதிசெய்துளது. முன்னதாக முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருந்த ரஷித் கான், தென் ஆப்பிரிக்க தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஃப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே தொடர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரையில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26ஆம் தேதியும், புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது ஜனவரி 2ஆம் தேதியும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை