ஜிம்பாப்வே தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Sun, Dec 01 2024 20:09 IST
Image Source: Google

சமீப காலங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியானது சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 9ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதனையடுது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் அறிமுக வீரர் ஸுபைத் அக்பாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து தர்விஷ் ரசூலியும் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்த முஜீப் உர் ரஹ்மனுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஸத்ரானுக்கு இந்த தொடரிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கானும், ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஸ்மதுல்ல ஷாஹிதியும் தொடர்கின்றனர். இதுதவிர்த்து ரஹ்மனுல்லா குர்பாஸ், முகமது நபி, குல்பதீன் நைப், நூர் அஹ்மத் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். 

ஆஃப்கானிஸ்தான் டி20 அணி: ரஷீத் கான் (கே), ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது இஷாக், செதிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பதின் நைப், கரீம் ஜானத், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக்.

ஆஃப்கானிஸ்தன் ஒருநாள் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், அப்துல் மாலிக், செதிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, அல்லா கசன்ஃபர், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, பிலால் சமி, நவீத் ஜத்ரான், ஃபரித் அஹ்மத் மாலிக்.

Also Read: Funding To Save Test Cricket

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 9, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 2ஆவது டி20 போட்டி- டிசம்பர் 11, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 3ஆவது T20I போட்டி - டிசம்பர் 12, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • முதல் ஒருநாள் போட்டி - டிசம்பர் 15, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 2ஆவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 17, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • 3ஆவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 19, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே
  • முதல் டெஸ்ட் - 26-30 டிசம்பர், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
  • இரண்டாவது டெஸ்ட் - 2-6 ஜனவரி, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை