ஆட்டத்தின் வெற்றியை மாற்றிய கேட்ச் - வைரலாகும் காணொளி!

Updated: Tue, Jun 11 2024 11:11 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லார் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 ரன்களையும், டேவிட் மில்லர் 29 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - மஹ்முதுல்லா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற நிலையில் தாவ்ஹித் ஹிரிடோய் 37 ரன்களுக்கும், மஹ்முதுல்லா 20 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி 2 பந்துகளில் வங்கதேச அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் அனுபவ வீரர் மஹ்முதுல்லா சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கிய அடிக்க, அப்போது பவுண்டரி எல்லையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பந்தை சரியாக கணித்ததுடன் கேட்ச் பிடித்து அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றியும் உறுதியானது. இந்நிலையில் ஐடன் மார்க்ரமின் கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை