இரட்டை சதமடித்த இஷான் கிஷானை பரிசோதனை மட்டுமே செய்துவருகின்றனர் - அஜய் ஜடேஜா விளாசல்!

Updated: Tue, Dec 05 2023 12:16 IST
Image Source: Google

இந்திய அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆன இஷான் கிஷன் 2022இல் மாற்று துவக்க வீரராக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரை அணிக்குள் வருவதும், போவதுமாகவே இருக்கிறார் இஷான் கிஷன். இத்தனைக்கும் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தன்னை நிரூபித்து வருகிறார். ஆனாலும், அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

2023 ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பையில் கிடைத்த வாய்ப்புகளில் ரன் குவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி இரண்டு அரைசதம் அடித்தார். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளின் போது ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்க்க வேண்டி இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக கூறியது அணி நிர்வாகம்.

இந்த நிலையில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டத குறித்து விமர்சனம் செய்துள்ள அஜய் ஜடேஜா, "இந்திய கிரிக்கெட் என்பதே இப்போது வாய்ப்பு மறுக்கப்படுவது மற்றும் அணியில் இருந்து நீக்குவது தான். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சில வீரர்களில் அவரும் ஒருவர் என்பதால் எனக்கு இஷான் கிஷனை பிடிக்கும். 

இஷான் கிஷனுக்கு மூன்று போட்டிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், அவரை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடமாக அவரை வைத்து பரிசோதனை செய்து வருகிறார்கள். அவரை பரிசோதித்துக் கொண்டே இருந்தால் அவரால் எப்படி தன்னை வெளிப்படுத்தி சிறப்பாக ஆட முடியும்?" என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை