ஆசியாவில் உள்ள சவால்களை நாங்கள் நன்கு அறிவோம் - அஜாஸ் பட்டேல்!

Updated: Tue, Nov 05 2024 13:31 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது.  அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில், நியூசிலாந்தின் தயாரிப்புகள் மற்றும் வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்ப எங்களை தகவமைத்துக் கொள்ளும் தன்மை ஆகியவை கடந்த வாரம் இந்தியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க 3-0 டெஸ்ட் தொடரை ஸ்வீப் செய்ய உதவியது என நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நேர்மையாக கூறவேண்டும் எனில், கடந்த குளிர்காலத்திலேயே நாங்கள் எங்களுடைய பிட்ச்சுகளை சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றினோம். 

மேலும் நாங்கள் முயற்சித்த மற்றும் பயிற்சி செய்த வெவ்வேறு மேற்பரப்புகளை நாங்கள் உறுதிசெய்தோம், எனவே நாங்கள் வெவ்வேறு பரப்புகளில் பந்துவீசுவதற்கு நிபந்தனையுடன் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இங்கு வந்து மூன்று வெவ்வேறு பிட்சுகளில் விளையாடுவோம் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் ஆசியாவிற்குச் செல்வதில் உள்ள சவால்களில் ஒன்று, நிலைமைகள் எல்லா நேரத்திலும் மாறப் போகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம் என்று நினைக்கிறேன். 

மேலும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் மற்றும் விளையாட்டிற்குள் கூட இருக்க வேண்டும். நிலைமைகள் மிக விரைவாக மாறுகின்றன.  அதாவது இந்த மும்பை டெஸ்டில் கூட நான் பந்துவீசும் போது முதல் இன்னிங்ஸில் நான் நன்றாகவே பந்துவீசுகிறேன் என்று நினைத்தேன், ஆனால் விக்கெட் சரியாக திரும்பவில்லை, பிறகு மதிய உணவுக்குப் பிறகு திடீரென்று பந்து திரும்ப ஆரம்பித்தது. அதனால் இங்கு நான் எனது வேகத்தை மாற்றி பந்துவீசியது எனக்கு உதியாக அமைந்தது.

Also Read: Funding To Save Test Cricket

 சில சமயங்களில் இங்குள்ள நிலைமைகள் காலையில் ஒரு மாதிரியும், மதியத்தில் ஒருமாதியாகவும் வித்தியாசமாக இருக்கும், எனவே ஒரு சுழற்பந்து வீசசளராக  அதிலிருந்து அதிக பலனைப் பெறுவது எப்படி, உங்கள் வேகத்தை எப்படி மாற்றுவது, பந்தின் வடிவத்தை வைத்திருக்கும் போது எப்படி மேலும் கீழும் செல்வது என்பதை அறிவது முக்கியமான ஒன்றாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை