ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை - அஜிங்கியா ரஹானே கோரிக்கை!

Updated: Sat, Jan 28 2023 17:49 IST
Ajinkya Rahane calls for five-day games all through Ranji Trophy (Image Source: Google)

இந்தியாவின் பாரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுகளோடே வெளியேறியது. 

இதில் மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி டிரா செய்தது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்தன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை அணியால் தகுதி பெற முடியாமல் போனது. 

மும்பை அணியின் வெற்றிக்கு 28 ஓவர்களில் 253 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 58 ரன்கள் குறைவாக எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து ரஞ்சி கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஐந்து நாள்களுக்கு நடைபெற வேண்டும் என ரஹானே தெரிவித்துள்ளார். தற்போது ரஞ்சி கோப்பையில் நாக் அவுட் ஆட்டங்கள் மட்டுமே ஐந்து நாள்களுக்கு நடைபெறுகின்றன.

இதுகுறித்து பேசிய ரஹானே, “முதல்தர கிரிக்கெட் ஆட்டங்கள் ஐந்து நாள்களுக்கு நடக்கலாம். டெஸ்ட் ஆட்டங்களை ஐந்து நாள்களுக்கு விளையாடுகிறோம். இதனால் முடிவு உறுதியாகிறது. ஐந்து நாள்களுக்கு ஆட்டம் நடைபெற்றால் இன்னும் அதிகமான முடிவுகள் கிடைக்கும். நான்கு நாள் ஆட்டங்களில் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் உங்களுக்கு முடிவுகள் கிடைக்காது. சவாலாக இருக்கும். ஐந்து நாள்களில் முடிவுகள் அடிக்கடிக் கிடைக்கும். 

இது அட்டவணைக்கு எப்படிச் சரிவரும் எனத் தெரியவில்லை. நான்கு நாள் ஆட்டங்களில் ஒருநாளில் ஒரு பகுதியை நன்கு விளையாடிவிட்டால் டிராவை எட்டிவிடலாம். ஒவ்வொரு பகுதியாக எப்படி நிலைத்து நின்று பேட்டிங் செய்வது, பந்துவீச்சில் தொடர்ந்து ஒரேமாதிரியாக வீசுவது போன்றவை எல்லாம் ஐந்து நாள் கிரிக்கெட்டில் சரியாகக் கற்றுக்கொள்ளலாம். எனவே ரஞ்சி கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஐந்து நாள்களுக்கு நடைபெறால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை