ஆண் குழந்தைக்கு தந்தையானார் அஜிங்கியா ரஹானே!

Updated: Wed, Oct 05 2022 21:01 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும், விராட் கோலி இல்லாத சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக்கவும் செயல்பட்டவர் அஜிங்கியா ரஹானே. இவர் இந்திய அணிக்காக 82 டெஸ்ட், 86 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,931 ரன்களையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 2,829 ரன்களையும் சேர்த்துள்ளார். இதில் 15 சதங்களும் அடங்கும்.

இந்நிலையில், அஜிங்கியா ரஹானே மற்றும் ராதிகா தம்பதியினருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரகானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஹானே- ராதிகா தம்பதிக்கு ஏற்கனவே ஆர்யா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ள நிலையில் இன்று 2ஆவது குழந்தை பிறந்துள்ளது.

தனக்கு ஆண் குழந்தை பிறந்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஹானே வெளியிட்டுள்ள தகவலில், “இன்று காலை நானும் எனது மனைவியும் அழகான ஒரு ஆண் குழந்தையினை இந்த உலகத்திற்கு வரவேற்றுள்ளோம். எனது மனைவி ராதிகாவும் எங்களது குழந்தையும் மிகவும் நலமாக உள்ளனர். உங்களின் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தங்களுக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஹானே தெரிவித்த பிறகு, அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை