பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த அலிக் அதானாஸ்; வைரல் காணொளி!
பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான சிபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டி பார்படாஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டி பெவிலியனுக்கு திரும்பினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 32 ரன்களையும், ஜோஷுவா டா சில்வா 25 ரன்களையும் சேர்த்தனர். பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரக்கீம் கார்ன்வால் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவருக்கு துணையாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ஒபேத் மெக்காய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் கதீம் அலீன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கதீம் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அலிக் அதானாஸ் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சில் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பார்படாஸ் ராயல்ஸ் அணி வீரர் ரஹ்கீம் கார்ன்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் அலிக் அதானாஸ் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி ரஹ்கீம் கார்ன்வால் பந்துவீச்சில் பேட்ரியாட்ஸ் அணி வீரர் ரையான் ஜான் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த வேகத்தில் வராத காரணத்தால் அவரால் அந்த ஷாட்டை முழுமையாக விளையாட முடியாமல் போனது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் அந்த பந்தானது மிட் விக்கெட் திசையில் சென்ற நிலையில், அப்போது ஸ்கொயர் லெக் தீசையில் ஃபீல்டிங் செய்து வந்த அலிக் அதானாஸ் ஓடிவந்து டைவ் அடித்ததுடன், பந்தை கேட்ச் பிடித்தும் அசத்தினார். மேலும் இது ரஹ்கீம் கார்ன்வாலின் 5ஆவது விக்கெட்டாகவும் அமைந்தது. இந்நிலையில் அலிக் அதானாஸ் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.