இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுக்கிறது - ரோஹித் சர்மா!

Updated: Thu, Nov 10 2022 18:31 IST
'All About Handling The Pressure In Knockout Games', Says Indian Skipper Rohit Sharma After Semi-Fin (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி - ஹர்திக் பாண்டியா மட்டும் போராடியதால் 20 ஓவர்களில் இந்தியா 168 ரன்களை எடுத்தது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் ஜோடியே ஆட்டத்தை முடித்தனர். இந்தியாவின் பந்துவீச்சு சொதப்பியதால் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வென்றனர்.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. பேட்டிங்கில் நாங்கள் ஓரளவிற்கு சிறப்பாகவே செயல்பட்டோம், குறிப்பாக கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலமே எங்களால் 160+ ரன்களை எடுக்க முடிந்தது. ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட செயல்படவில்லை என்பதே உண்மை. 

இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் நெருக்கடிகளை சமாளித்து விளையாடுவதே முக்கியம், ஆனால் அதை நாங்கள் சரியாக செய்யவில்லை. தற்போதைய அணியில் இருக்கும் பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் பல நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக விளையாடியவர்கள் தான். நெருக்கடிகளை சமாளித்து நிதானமாக விளையாடுவதே முக்கியமானதாக இருக்கும். 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியும் கடைசி வரை பரபரப்பாகவே இருந்தது, ஆனால் நாங்கள் பதட்டம் இல்லாமல் விளையாடியதால் தான் வெற்றி கிடைத்தது, இந்த போட்டியில் எதுவும் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை