பிஎஸ்எல் 2022: கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது பெஷ்வர் ஸால்மி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி சோயிப் மாலிக், ஹுசைன் தாலத் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்காளை சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 58 ரன்களையும், ஹுசைன் தாலத் 51 ரன்களையும் சேர்த்தனர். கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் நசீம் ஷா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய கிளாடியேட்டர்ஸ் அணியில் ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், சர்ப்ராஸ் அஹ்மத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வில் ஸ்மீத் அரைசதம் கடந்தார். 99 ரன்களை சேர்த்த ஸ்மீத் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே சேர்த்தனர். பெஷ்வர் ஸால்மி அணி தரப்பில் உஸ்மான் காதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் பெஷ்வர் ஸால்மி 24 ரன்கள் வித்தியாசத்தியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது.