பிபிஎல் 2021: ஆடிலெய்ட் ஸ்டிரைக்கர் அணியில் ஜார்ஜ் கார்டன்!

Updated: Fri, Sep 24 2021 22:09 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்டன். இவர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பிபிஎல் அணிகளில் ஒன்றான அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஜார்ஜ் கார்டனை அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பேசிய ஜார்ஜ் கார்டன், “அடிலெய்ட் ஸ்டிரைக்கர் அணிக்காக விளையாடுவதை எண்ணி உற்சாகமடைந்துள்ளேன். மேலும் என்னுடைய நெருங்கிய நண்பர்களையும் இந்த அணியில் என்னால் காண முடியும் என்பதால் மேலும் மகிழ்ச்சியாக உள்ளதென” தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை