இந்த வெற்றிக்கான அனைத்து பெருமையும் பந்துவீச்சாளர்களையே சாரும் - ரிஷப் பந்த்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபற்ற 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்ய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி ஆகியோரின் அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66 ரன்களையும், ஆயூஷ் பதோனி 50 ரன்களையும் சேர்க்க, அப்துல் சமத் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களையும், ரியான் பராக் 39 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த், “இந்த மாதிரியான போட்டிகள் நமது ஆளுமையை வளர்க்கின்றன. இது ஒரு அற்புதமான வெற்றி. ஒரு அணியாக, இது நம்மை வேறொரு நிலைக்கு அழைத்துச் செல்லும். இந்த மாதிரியான போட்டிகள் வீரர்கள் மற்றும் அணியின் குணத்தை வளர்க்கும். நாங்கள் எப்போதும் பேசும் நேர்மறையான விஷயங்கள் இவை. இதன்மூலம் இனி வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படப் போகிறோம் என்று நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான அனைத்து புகழும் பந்துவீச்சாளர்களையே சாரும். ஏனெனில் இது எளிதானது அல்ல, குறிப்பாக ஒரு ஆட்டத்தில் நாம் பின்னதங்கி இருக்கும் நிலையில் இருந்து வெற்றிபெற்றுள்ளோம். ராஜஸ்தான் அணி ஒரு பேட்டிங் யூனிட்டாக அற்புதமாக விளையாடினார்கள், ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்கள் தைரியத்தை எளிப்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். குறிப்பாக அவேஷ்கான் வீசிய அந்த மூன்று ஓவர்கள் அருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.