Rr vs lsg ipl 2025
6,6,2,6,6 - சந்தீப் சர்மா ஓவரை பிரித்து மேய்ந்த அப்துல் சமத் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த அப்துல் சமத், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
Related Cricket News on Rr vs lsg ipl 2025
-
இந்த வெற்றிக்கான அனைத்து பெருமையும் பந்துவீச்சாளர்களையே சாரும் - ரிஷப் பந்த்!
ராஜஸ்தான் அணி ஒரு பேட்டிங் யூனிட்டாக அற்புதமாக விளையாடினார்கள், ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் தங்கள் தைரியத்தை எளிப்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மார்க்ரம், பதோனி அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 181 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
துருவ் ஜுரெலின் சிறப்பான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த்; காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47