டி20 உலகக்கோப்பை: ஜோசப், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஜிம்பாப்வே!

Updated: Wed, Oct 19 2022 17:59 IST
Image Source: Google

டி20 உலக கோப்பையில் இன்று க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேயான தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. ஹோபர்ட்டில் இன்று நடந்த முதல் போட்டியில் ஸ்காட்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் ஜிம்பாப்வேவும் ஆடிவருகின்றன. ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எவின் லூயிஸ் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பூரன் வெறும் 7 ரன்களுக்கு நடையை கட்ட, சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 36 பந்தில் 45 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஷமர் ப்ரூக்ஸ் (0), ஜேசன் ஹோல்டர்(4) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ரோவ்மன் பவல் 21 பந்தில் 28 ரன்களும்,  அகீல் ஹுசைன் 18 பந்தில் 23 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஜிம்பாப்வே அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய சிக்கந்தர் ராசா,4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே - ரேஜிஸ் சகாப்வா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மதவெரே 27 ரன்களிலும், சகாப்வா 13 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டொனி, வில்லியம்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்த ரஸாவும் 14 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் லுக் ஜோங்வா ஒருமுனையில் அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் 18.2 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தி ஜிம்பாப்வேவை வீழ்த்தி, சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை