ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அல்லா கசான்ஃபர் சேர்ப்பு!

Updated: Wed, Dec 25 2024 19:30 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றி பெற்றதுடன், ஜிம்பாப்வேவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை (டிசம்பர் 26) முதல் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தன் டெஸ்ட் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஆஃப்கான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுக வீரர் அல்லா கசான்ஃபர் சேர்க்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜிம்பாப்வே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்லா கசான்ஃபர் தற்சமயம் டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு பெற்றார். இதன்மூலம் தற்போது இத்தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியில் 8 அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

Also Read: Funding To Save Test Cricket

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ராம் அலிகைல், அஃப்சர் ஜசாய், ரியாஸ் ஹசன், செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹிர் ஷா, இஸ்மத் ஆலம், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான், ஜாஹிர் ஷெஹ்சாத், ரஷித் கான், யாமின் அஹ்மத்சாய், பஷீர் அஹ்மத், நவீத் சத்ரான், ஃபரீத் அஹ்மத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை