ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!

Updated: Sat, Jul 08 2023 12:21 IST
Ambati Rayudu pulls out of the inaugural Major League Cricket! (Image Source: Google)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2018 ஆம் ஆண்டில் இருந்து பயணித்து வரும் அம்பத்தி ராயுடு, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் உடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிசிசிஐ விதிமுறைப்படி, உள்ளூர் கிரிக்கெட் உட்பட அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி உண்டு. 

ஓய்வு பெறுவதற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தம் இருப்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட முடியாது என்று விதிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20 லீகில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்னும் பெயரை வைத்துள்ளது. 

இந்த அணியில் பிராவோ, டெவன் கான்வே, மிட்ச்சல் சான்டனர் உள்ளிட்ட சில சிஎஸ்கே நட்சத்திரங்கள் புதிதாக எடுக்கப்பட்டனர். மே மாதம் 28ஆம் தேதியுடன் ஓய்வு முடிவு அறிவித்த அம்பத்தி ராயுடு, பிசிசியை விதிமுறைப்படி வெளிநாடுகளுக்கு சென்று லீக் போட்டிகளில் விளையாடலாம் என்பதன் அடிப்படையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் ஜூன் 15ஆம் தேதி கையெழுத்தானது.

அதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வீரர்கள் பலர் தங்களது ஓய்வு முடிவை அறிவித்த அடுத்த சில வாரங்களிலேயே வெளிநாடுகளின் லீக் போட்டிகளில் சென்று விளையாடுகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று விளையாட வேண்டும் என்கிற திட்டத்துடன் ஓய்வு முடிவை அறிவிப்பதாக தெரிகிறது. இதனை தடுக்கும் விதமாக ஓய்வு முடிவை அறிவித்து குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகே வெளிநாடுகளுக்கு சென்று லீக் போட்டிகளில் விளையாட முடியும் என்கிற விதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

குறிப்பிட்ட காலங்கள் முடிந்த பிறகே அம்பத்தி ராயுடு வெளிநாடுகளின் லீக் போட்டிகளில் பங்கேற்கும் சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தான் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பின்வாங்கியுள்ளார் என்கிற தகவல்களும் கூறப்படுகிறது.

இருப்பினும் ராயுடு தரப்பிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார் என்று தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. இது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “சொந்த காரணங்களுக்காக அம்பத்தி ராயுடு இந்த வருடம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடவில்லை. தன்னுடைய முடிவை திரும்ப பெற்று இருக்கிறார். இந்தியாவில் இருந்தபடியே டெக்சாஸ் அணிக்கு தன்னுடைய ஆதரவை கொடுப்பார்.” என்று வெளியிடப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை