எம்எல்சி 2023: ராயுடு, மில்லர், பிராவோ ஆகியோரை ஒப்பந்தம் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!

Updated: Fri, Jun 16 2023 12:24 IST
Ambati Rayudu to play for Texas Super Kings in the inaugural Major League Cricket season 2023! (Image Source: Google)

உலகம் முழுவதும் கிரிக்கெட் பிரபலமாவதற்கு டி20 கிரிக்கெட் வடிவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கால்பந்து ஆக்கிரமித்து இருக்கும் ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் தற்போது கிரிக்கெட் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இதேபோன்று உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை பலரும் எடுத்து வருகிறார்கள்.

சச்சின் டெண்டுல்கர்,வார்னே உள்ளிட்டோர் இணைந்து ஆல் ஸ்டார் கிரிக்கெட்  என்ற தொடரை கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தினார்கள். இது அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதனை பயன்படுத்தி ஐசிசியும் தற்போது பல்வேறு போட்டிகளை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 போட்டிகள் நடத்துவது அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையை புளோரிடா மாகாணத்தில் நடத்த முடிவெடுத்துள்ளது உள்ளிட்ட திட்டங்களும் உள்ளன.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை போல் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரை நடத்த உள்ளனர். இதற்காக ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க கிரிக்கெட் சங்கம் கட்டி இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் அணி நிர்வாகமே அமெரிக்க நகரங்களை மையமாக வைத்து அணிகளை வாங்கி இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்சாஸ் நகரத்தை மையமாக வைத்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியை வாங்கியுள்ளது. 

அதில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே வீரர்கள் அம்பத்தி ராயுடு, டெவான் கான்வே, டுவைன் பிராவோ, மிட்ச்செல் சான்ட்னர் உள்ளிட்ட வீரர்கள் டெக்சாஸ் அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதேபோன்று டேவிட் மில்லர்,டேனியல் சாம்ஸ் ஆகியோரும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் தான். பொதுவாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படாத நிலையில் டெக்சாஸ் அணி இரண்டு பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. சமி அஸ்லாம், ஷியா ஷாசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று மிலந்த் குமார் என்ற 31 வயதான இந்திய வீரரையும் டெக்சாஸ் அணி ஒப்பந்தம் செய்து இருக்கிறது. ரஸ்தி தியரான்,கேமரான் ஸ்டிவன்சன், முக் மல்லா ஆகிய அமெரிக்க வீரர்கள் விளையாடுகின்றனர். 

அந்தவகையில், 4 தென் ஆபிரிக்கா வீரர்கள், 3 அமெரிக்க வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு பாகிஸ்தான் வீரர்கள், இரண்டு நியூசிலாந்து வீரர்கள், ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர், ஒரு இலங்கை வீரர் என டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அனைத்தையும் கலந்த கலவையாக அணியை அமைத்திருக்கிறது.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை