இரானி கோப்பை: இரட்டம் சதமடித்த ஜெய்ஷ்வால்; ஈஸ்வரன் சதமடித்து அசத்தல்!

Updated: Wed, Mar 01 2023 20:54 IST
An excellent display of batting from Abhimanyu Easwaran and Yashasvi Jaiswal against Madhya Pradesh (Image Source: Google)

கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் மயங்க் அகர்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஈஸ்வரனுடன் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

தொடர்ந்து இருவரும் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டதுடன் சதமடித்தும் அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 370 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்து அசத்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஷ்வால் இரட்டை சதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 30 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 213 ரன்களைச் சேர்த்திருந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டமிழக்க, மறுமுனையில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் 17 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 154 ரன்களைச்சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.

இதில் பாபா இந்திரஜித் 3 ரன்களுடனும்,சௌரப் குமார் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். மத்திய பிரதேச அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை