T20 WC 2024: பிஎன்ஜி-யை 77 ரன்களில் சுருட்டியது உகாண்டா!

Updated: Thu, Jun 06 2024 06:46 IST
Image Source: Google

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள பாப்புவா நியூ கினி - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பிஎன்ஜி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பிஎன்ஜி அணிக்கு கேப்டன் அசாத் வாலா - டோனி உரா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அசாத் வாலா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செசே பாவ் 5 ரன்களுக்கும், டோனி உரா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய லெகா சியகா - ஹிரி ஹிரி இணை ஓரளவு தக்குப்பிடித்து விளையாடியாது. ஆனாலும் சியகா 12 ரன்களுக்கும், ஹிரிஹிரி 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சார்லஸ் அமினி 5 ரன்களுக்கும், சாத் சோப்பர் 4 ரன்களிலும் என வந்த வேகத்திலேயே பெவியனுக்குத் திரும்பினார். 

பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிப்லின் டொரிகா 12 ரன்களுக்கும், அலெய் நாவ் 5 ரன்களிலும், நார்மன் வனுவா 5 ரன்களிலும் என அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உகாண்டா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்பெஷ் ரம்ஜானி, காஸ்மஸ் கியூட்டா, ஜுமா மியாகி, ஃபிராங்க் நசுபுகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை