திலக், ரியான் அரைசதம் வீண்; இந்திய ஏ அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஏ அபார வெற்றி!

Updated: Sat, Oct 04 2025 07:12 IST
Image Source: X

ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரப்பூர்வமற்ற கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கான்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணியில் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பிரப்ஷிம்ரன் சிங் ஒரு ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா - ரியான் பராக் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். பின்னர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 94 ரன்களில் விக்கெட்டை இழந்து வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் 58 ரன்களில் ரியான் பராக்கும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷித் ரானா 21 ரன்களையும், ரவி பிஷ்னோய் 26 ரன்னிலும் என ஆட்டமிழக்க, இந்திய ஏ அணி 45.5 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்திரேலிய ஏ அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகளையும், தன்விர் சங்கா, வில் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு 25 ஓவர்களில் 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணிக்கு மெக்கன்ஸி ஹார்வி - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மெக்குர்க் 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனார். அதன்பின் மெக்கன்ஸியுடன் இணைந்த கூப்பர் கனொலியும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்கன்சி ஹார்வி 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: LIVE Cricket Score

மறுபக்கம் கூப்பர் கனொலி 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஏ அணி 16.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கன்ஸி ஹார்வி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை