நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Sat, Oct 04 2025 06:56 IST
Image Source: Cricketnmore

NZ vs AUS, 3rd T20ICricket Tips: நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி மழையாலும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானூயில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணி விளியாடும். மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

NZ vs AUS: Match Details

மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
இடம் - பே ஓவல், மவுண்ட் மவுங்கானூய்
நேரம்- அக்டோபர் 04, காலை 11.45 மணி (இந்திய நேரப்படி)

NZ vs AUS: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளையும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்க்க முடியும். கூடுதலாக, ஒடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் நீங்கள் இந்த தொடரை ரசிக்கலாம்.

NZ vs AUS: Head-to-Head in T20Is

  • Total Matches: 21
  • New Zealand: 6
  • Australia: 14
  • No Result/Tied: 1

NZ vs AUS: Ground Pitch Report

மவுண்ட் மவுங்கானுய், பே ஓவலில் நடைபெறும் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்ய ஆர்வம் காட்டுகிறது. இங்கு இதுவரை 22 டி20 போட்டிகளில் 15 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் சராசரி 160 ரன்களாக உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 243 ரன்கள் உள்ளது. 

NZ vs AUS: Possible XIs

New Zealand: டிம் சீஃபர்ட், டெவன் கான்வே, டிம் ராபின்சன், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், பெவன் ஜேக்கப்ஸ், ஜகரி ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி

Australia: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மிட்ச் ஓவன், சேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுயிஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

Today Match Prediction: டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

NZ vs AUS Match 3rd T20I Prediction, NZ vs AUS Pitch Report, Today Match NZ vs AUS, NZ vs AUS Prediction, Injury Update of the match between New Zealand vs Australia

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை