மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இலங்கை!
ENG-W vs SA-W, WCWC 2025: மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் லாரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் தலா 5 ரன்னிலும், சுனே லூஸ் 2 ரன்னிலும், மரிஸான் கேப் 4 ரன்னிலும், அன்னேக் போஷ் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய சினோலா ஜாஃப்டா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் 20.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் லின்ஸி ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், நாட் ஸ்கைவர், சோஃபி எக்லெஸ்டோன், சார்லீன் டீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் - ஏமி ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பியூமண்ட் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் ஏமி ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏமி ஜோன்ஸ் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்களையும், டாமி பியூமண்ட் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் 14.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.