ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!

Updated: Sat, Oct 04 2025 07:24 IST
Image Source: Cricketnmore

AUS-W vs SL-W, Match 5, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

AUS-W vs SL-W: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா மகளிர் vs இலங்கை மகளிர்
இடம் - ஆர்.பிரமதாச கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- அக்டோபர் 04, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)

AUS-W vs SL-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS-W vs SL-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 11
  • Sri Lanka Women: 00
  • Australia Women: 11
  • No Result: 00

AUS-W vs SL-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 179 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 98 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 69 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 232 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AUS-W vs SL-W: Possible XIs

Sri Lanka Women: ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரம, சாமரி அத்தபட்டு (கேப்டன்), கவிஷா தில்ஹாரி, நீலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, தேவமி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

Australia Women: ஜார்ஜியா வால், அலிசா ஹீலி (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், அலனா கிங், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஸ்கட்

Today Match Prediction: நடப்பு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே வெற்றியுடன் தொடங்கியுள்ளதால், இப்போட்டியிலும் அந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

AUS-W vs SL-W Prediction Match 5, ICC Womens World Cup 2025, Today Match AUS-W vs SL-W, AUS-W vs SL-W Prediction, AUS-W vs SL-W Predicted XIs, Injury Update of the match between Sri Lanka Women vs Australia Women

Also Read: LIVE Cricket Score

Disclaimer: The prediction or cricket tips are purely based on the understanding and research of the writer. So kindly make sure to consider the points above while making your predictions

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை