6 பந்துகளில் 6 சிக்சர்கள்; வானவேடிக்கைக் காட்டிய ரஸ்ஸல்!

Updated: Sun, Aug 28 2022 19:33 IST
Image Source: Google

டி20 கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் குறையும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் லீக், கரீபியன் பிரிமியர் லீக் நிர்வாகங்கள் இணைந்து 6IXTY என்னும் 10 ஓவர் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போட்டிக்கான விதிமுறைதான் ஹைலைட்டே. ஒவ்வொரு அணியும் 6 விக்கெட் வரை களமிறக்கலாம். 6 விக்கெட்கள் முடிந்த பிறகு, ஆல்-அவுட் என அறிவிக்கப்படும். 

ஒவ்வொரு அணிக்கும் இரண்டு ஓவர்கள் பவர் பிளே உண்டு. முதல் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்தால் மட்டுமே, மூன்றாவது பவர் பிளே கிடைக்கும். அந்த பவர் பிளேவை 3 முதல் 9 ஓவர்களுகுள் எடுத்துக்கொள்ளலாம். முதல் 5 ஓவர்களை, ஒரே என்டில் இருந்துதான் பந்துவீச வேண்டும். அடுத்த 5 ஓவருக்கு எதிர் பெவிலியன் என்டில் இருந்து பந்துவீச வேண்டும்.

இப்படி புது விதிமுறைகள் அதிகம் இருப்பதால் இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும், வெஸ்ட் இண்டீஸில் இந்த தொடர் நடைபெறும் என்பதால் காட்டடிக்கு பஞ்சமிருக்காது எனவும் கருதப்பட்டது. இறுதியில் அதேபோல்தான் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 6IXTY லீக் போட்டியில் செய்ண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸல் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். டோமினிக் ட்ரேக்ஸ் வீசிய 7ஆவது ஓவரின் 3,4,5,6 ஆகிய பந்துகளில் சிக்ஸர்களை அடித்த இவர் தொடர்ந்து 8ஆவது ஓவரின் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்து, மொத்தம் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

17 பந்துகளில் அரை சதம் அடித்த இவர், இறுதியில் 24 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரி உட்பட 72 ரன்களை குவித்து அசத்தினார். மேலும் டிம் செய்ஃபர்ட் 22 (13), டியான் வெப்ஸ்டர் 22 (10) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், நிவைஸ் அணி 10 ஓவர்களில் 155/5 ரன்களை குவித்தது.

 

இலக்கை துரத்திக் களமிறங்கிய செய்ண்ட் கிட்ஸ் அணியும் இந்த மெகா இலக்கை அபாரமாக துரத்தி வந்தது. ஓபனர் ப்ளெட்சர் 33 (15) ரன்களும், 5ஆவது இடத்தில் களமிறங்கிய ரூதர்போர்ட் 50 (15), அடுத்து டோமினிக் ட்ரேக்ஸ் 33 (10) ஆகியோர் ரன்களை குவித்தனர். கடைசி ஓவருக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சீல்ஸ் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

இதனால், செய்ண்ட் கிட்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டு அணிகளும் சேர்ந்து 20 ஓவர்களில் 307 ரன்களை சேர்த்தது என்பது குறிப்பிடத்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை