Angelo Mathews Retirement: இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

Advertisement

இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 495 ரன்களையும், அதனைத்தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 485 ரன்னிலும் ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 285 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

Advertisement

பின்னர் 295 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 4  விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்தது. இதன் காரணமாக இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இப்போட்டி முடிந்து பேசிய அவர், “நான் ஓய்வு முடிவை அறிவித்ததிலிருந்து, இதுவரை எனக்குக் கிடைத்த அன்பை என்னால் நம்பவே முடியவில்லை. நிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னை முழுமையாக ஆதரித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இது ஒரு எளிதான பயணம் அல்ல, நிறைய ஏற்ற தாழ்வுகள், மகிழ்ச்சி மற்றும் சோகம் இருந்தன. ஆனால், இதையெல்லாம் தாண்டி எனக்குக் கிடைத்த ஆதரவின் காரணமாகவே என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. கிரிக்கெட்டின் சிறந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெறுகிறேன். இப்போது இளம் வீரர்கள் இலங்கையை வழிநடத்த வேண்டிய நேரம் இது. நிச்சயமாக எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இளம் திறமையாளர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இலங்கை அணிக்காக இதுவரை 119 டெஸ்ட் போட்டிகாளில் விளையாடி 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 8167 ரன்களையும், பந்துவீச்சில் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்சமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ஏஞ்சலோ மேத்யூஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என்பதை தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 சதம், 40 அரைசதங்களுடன் 5916 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News