விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 31) ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டனான ஸ்டாபனி டெய்லர், கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததன் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் கேப்டனாக அனிசா முகமதுவை நியமிப்பதாக் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது செயல்படவுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: அனிசா முகமது (கேப்டன்), டீன்ட்ரா டாட்டின், ஆலியா அல்லீன், ஷாமிலியா கோனெல், பிரிட்னி கூப்பர், ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, கியானா ஜோசப், கைசியா நைட், கிஷோனா நைட், ஹெய்லி மேத்யூஸ், சேடன் நேஷன், ஷகேரா செல்மன்.