ஐபிஎல் 2022: தனிமைப்படுத்துதலில் ரிக்கி பாண்டிங்; சிக்கலில் டெல்லி!

Updated: Fri, Apr 22 2022 18:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 34ஆவது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கடந்த ஒரு வார காலமாக சிக்கல் மேல் சிக்கல் உருவாகி வருகிறது. அந்த அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா உறுதியான நிலையில், அடுத்தடுத்து 5 பேருக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து ஐபிஎல் ரத்து செய்யப்படுமா என்ற அளவிற்கு சென்று இறுதியில் போட்டி இடங்கள் மட்டும் மாற்றப்பட்டது.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் டெல்லி அணி சாதித்து தான் வருகிறது. முக்கிய வீரர்கள் இல்லாத போதும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலிலும் 6ஆவது இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் டெல்லி அணிக்கு பெரும் ஆப்பு வந்துள்ளது. அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இன்றைய போட்டியில் இருக்க மாட்டார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிங்கின் குடும்பத்தினர் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளதால், பாண்டிங்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் தூண் பாண்டிங் எனக்கூறலாம். ஆட்டத்தின் போது, அவரின் ஐடியாக்கள் தான் பெரும்பாலும் செயல்படுத்தப்படுகின்றன. ஃபீல்டிங் திட்டமும் அவர் செயல்படுத்துவது தான் எனத்தெரிகிறது. அவர் இல்லையென்றால் ரிஷப் பந்த் என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை