தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. 

Advertisement

அதன்படி விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்டில் சிமலனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரிக்கெல் ரிக்கெல்டன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்க்ரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஹென்ரிச் கிளாசென் 41 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இறுப்பினும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கோ ஜான்சென் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 16 பாந்துகளிலேயே தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 54 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதுவரை 59 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஷ்தீப் சிங் 92 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதற்கு முன் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 70 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இரண்டாவது மற்று மூன்றாம் இடங்களில் இருந்த நிலையில், அவர்களை தற்சமயம் அர்ஷ்தீப் சிங் முந்தியுள்ளார். அதேசமயாம் இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சஹால் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News