ஆண்டின் சிறந்த டி20 வீரர், வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

Updated: Sun, Dec 29 2024 20:37 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங், இஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், பாகிஸ்தானின் பாபர் ஆசாம் மற்றும் ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ரஸா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

இதில் இந்திய அணியைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சிக்கந்தர் ரஸா 24 போட்டிகளில் 573 ரன்களையும், பந்துவீச்சில் 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 15 போட்டிகளில் விளையாடி 539 ரன்களையும், பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 24 போட்டிகளில் 738 ரன்களையும் சேர்த்து இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அதேசமயம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுகான பரிந்துரை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், இலங்கை அணியின் சமாரி அத்தபத்து, நியூசிலாந்து அணியின் அமெலியா கெர் மற்றும் அயர்லாந்து அணியின் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்திய லாரா வோல்வார்ட் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கினை வகித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து இந்தாண்டில் 19 போட்டிகளில் விளையாடியுள்ள வோல்வார்ட் 673  ரன்களைக் குவித்துள்ளார். அயர்லாந்து அணியைச் சேர்ந்த ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 18 போட்டிகளில் விளையாடி 544 ரன்கள் மற்றும் 21 விக்கெட்டுகளையும், நியூசிலாந்தின் அமெலியா கெர் 18  போட்டிகளில் 387 ரன்களையும், 29 விக்கெட்டுகளையும், இலங்கை அணியின் சமாரி அத்தபத்து 21 போட்டிகளில் 720 ரன்களையும் 21 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை