ஆஸி. கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பிசிசிஐ தெரிவித்தது. மேலும் நடப்பு சீசனில் இதுவரை 29 லீக் போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.
இன்னும் 30 போட்டிகள் வரை மீதம் இருக்கிறது. இதனால் மீதமுள்ள போட்டிகளை எல்லாம் எப்போது ? நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு ஐபிஎல் தொடரை பாதியிலயே நிறுத்தப்பட்டிருப்பது ரசிகர்களிடயையே அதிரச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல்லில் பங்கேற்றக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது நலனை கருதி தான் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல்லில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஏற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவிற்கு விமான சேவையை மே 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாடு திரும்புவதற்கு விமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டு பிரதமர் மோரிசன் கூறியிருந்தனர். இதை மீறி ஆஸ்திரேலியாவிற்கு வரும் வீரர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதுகுறித்து கொல்கத்தா அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் கூறுகையில்“ஆஸி.பிரதமர் மோரிசனின் இந்த முடிவை கேட்டபோது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நாங்கள் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஜூன் துவக்கம் வரை இந்தியாவில் இருக்க ஒப்பந்தம் செய்து இருந்தோம்.
எனவே மே 15ஆம் தேதிக்கு பிறகு விமான சேவை தொடங்கியதும் நாங்கள் நாடு திரும்புவோம். மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த பிறகு நாடு திரும்புவதாக ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்” என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.