இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. இதனால் இப்போட்டியானது 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது.  இதனால் இலங்கை அணி 23 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ் ஆகியோர தலா 56 ரன்களை எடுத்தனர். 

Advertisement

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 23 ஓவரில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரண்டன் கிங் 16 ரன்னும், ஷாய் ஹோப் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீர எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தியதுடன் 102 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 50 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இருப்பினும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவியன் எவின் லூயிஸ் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் இலங்கை அணி செயல்பாடு குறித்து பேசிய கேப்டன் சரித் அசலங்கா, “நிஷான் மதுஷ்காவின் ஃபார்ம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த மாதிரி ஃபார்மில் ஒரு வீரர் இருந்தால், அதுவே எங்களுக்கு பெரிய வெற்றி. அதனால் இப்போது தேர்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, ​​எங்களுக்கு நல்ல தலைவலியாக இருக்கிறது. தேர்வாளர்கள், பயிற்சியாளர் மற்றும் எனக்கு அணியைத் தேர்ந்தெடுப்பது கடினமான உள்ளது.

இந்த நேரத்தில், நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், அங்கு நாங்கள் வீரர்களுக்கு அணியில் போதுமான வாய்ப்புகளை வழங்குகிறோம் . அதேசமயம் காத்திருப்பவர்களுக்கும் நாங்கள்  வாய்ப்பை தருகிறோம். அதன் காரணமாகவே நாங்கள் மதுஷ்காவிற்கு பதிலாக நிஷங்காவிற்கு வாய்ப்பு கொடுத்தோம். ஏனெனில் பதும் நிஷங்கா கடந்த சில ஆண்டுகளாகவே அணிக்காக சிறப்பு வாய்ந்த ஒரு வீரராக செயல்பட்டு வருகிறார். 

Advertisement

அவிஷ்கா கடந்த தொடரில் நன்றாக விளையாடினார், எனவே அவருக்கும் இடம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நிஷானைப் பற்றியும் இப்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. ஏனெனில் அந்த மாதிரி ஃபார்மில் ஒரு வீரர் இருந்தால், அதுவே எங்களுக்கு பெரிய வெற்றி. இப்போது தேர்வுக் கூட்டத்திற்குச் செல்லும்போது, ​​எங்களுக்கு நல்ல தலைவலியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News