ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு மீண்டும் பேரிழப்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இதுவரை நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை அவர்களால் ஐந்தாவது டெஸ்டில் பங்கேற்க முடியா சூழ்நிலையில், சாம் பில்லிங், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அவர்கள் இவரும் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் விளையாடி வருவதால், இங்கிலாந்து அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.