அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அஷவினி குமார் - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள சவாஸ் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களையும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், விஜயகுமார், ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களையும், பிரியன்ஷ் ஆர்யா 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியான்ஸ் அணியை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் அஷ்வினி குமார் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாள்ர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய நிலையில், ஓவரின் இரண்டாவது பந்தை பிரப்ஷிம்ரன் சிங் எதிர்கொன்டார். அந்த பந்தில் பிரப்ஷிம்ரன் சிங் பெரிய் ஷாட்டை விளையாட முயற்சித்த நிலையில் அது அவரது பேட்டில் பட்டு தேர்ட்மேன் திசையை நோக்கி சென்றது.
Also Read: LIVE Cricket Score
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அஷ்வினி குமார் ஓடி வந்து முன்பக்கமாக டைவ் அடித்ததுடன், அபாரமான கேட்சையும் பிடித்து அசத்தினார். இதன் காரணமாக பிரப்ஷிம்ரன் சிங் 13 ரன்கள் மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் அஷ்வனி குமார் பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.