இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை!

Updated: Fri, Feb 23 2024 12:36 IST
இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்த அஸ்வின்; புதிய சதானை! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது தான். அதிலும் குறிப்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இங்கிலாந்து பேட்டர்களை நிலைகுலைய வைத்துள்ளார். 

அதேசமயம் அவருக்கு துணையாக இந்திய கிரிக்கெட்டின் சுழல் சகோதரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களது பங்கிற்கு தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளனர். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் செஷனிலேயே இங்கிலாந்து அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் அடுத்த செஷனில் இந்திய அணி இங்கிலாந்தை சுருட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளனது. 

இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படின் இன்றைய ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். ஒது இங்கிலாந்து அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றும் 100ஆவது விக்கெட்டாகும். 

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இந்திய வீரர் எனும் சதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். மேலும் ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 7ஆவது கிரிக்கெட் வீரர் எனும் சாதனையையும் அஸ்வின் தனதாக்கியுள்ளார். 

 

அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு எதிராக 100 விக்கெட்டுகளை கைப்பறிய முதல் இந்திய வீரர் எனும் சதனையும் ரவிச்சந்திர் அஸ்வினுக்கு சொந்தமாகியுள்ளது. மேலும் இச்சாதனையை நிகழ்த்தும் ஒன்பதாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஜேம்ஸ் ஆண்டர்சன், லான்ஸ் கிப்ஸ், கர்ட்னி வால்ஷ், கிளென் மெக்ராத், நாதன் லையன் ஆகியோர் இச்சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை